நடிகர் காளிதாஸ் ஜெயராம் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக காணப்படுகின்றார். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமின் மகன் தான் அவர்.
அவர் சமீபத்தில் ரிலீஸான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் காளிதாஸ் உடன் இருக்கும் பெண் யார் என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.
அவரை பற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கிறது. மேலும் அவர் தாரிணி காலிங்கராயர் என்ற மாடல் தான். அவர் 2019ல் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!