தமிழ் சினிமாவையே தன்னுடைய உடல் அழகாலும், திறமையான நடிப்பாலும் கட்டிப் போட்ட ஒருவரே நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'அலைகள் ஓய்வதில்லை' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.
அறிமுகப் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமையால் தொடர்ந்து 'நினைவெல்லாம் நித்யா, மௌன ராகம், ஆகாய கங்கை, நல்ல தம்பி, உள்ளதை அள்ளித்தா' எனப் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். அதுமட்டுமன்றி இவரின் சிறந்த நடிப்பினைப் பாராட்டி பலரும் பல விருதுகளையும் வழங்கிக் கௌரவித்திருக்கின்றார்கள்.
இன்று வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் நவரச நாயகனாக வலம் வந்த கார்த்திக் சில ஆண்டுகள் சினிமாவில் பெரிதும் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். எனினும் தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த 'அனேகன்' என்ற படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார்.
அதுமட்டுமன்றி தற்போது பிரஷாந்த் நடித்துள்ள 'அந்தகன்' என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்திக்கின் மனைவிகளின் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது நடிகர் கார்த்திக் கடந்த 1988-ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கார்த்திக் - ராகினி இருவரும் இணைந்து படத்திலும் நடித்துள்ளார்கள்.
இதன்பின் 1992-ஆம் ஆண்டு ராகினியின் தங்கை ரதியை திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். இந்நிலையில் இவர்கள் இருவருடனும் கார்த்திக் எடுத்துக் கொண்ட புகைப்படங்களே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்
- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்…போடப்பட்ட பிடி வாரண்ட் உத்தரவு..!
- தற்கொலைக்கு முயன்ற தீபிகா படுகோன்… இவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- சினேகா வீட்டில் ஒன்று கூடிய திரைப்பிரபலங்கள்… அப்படி என்னதான் விசேஷம்…வைரலாகும் புகைப்படங்கள்..!
- புதிதாகப் பெண் வாங்கிய விஜே விஷால்…அதுவும் ரெட் கலரிலேயா…? வாழ்த்துத் தெரிவிக்கும் ரசிகர்கள்..!
- அட நம்ம சத்யராஜ்ஜா இது..? சிறுவயதில் இப்படி இருந்திருக்காரே…வெளியான புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!