• Sep 20 2024

நம்ம தளபதியோட மச்சினிச்சிய பார்த்தீங்களா? வைரலாகும் புகைப்படம்

tech / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத உச்சத்தில் முன்னணி நடச்சத்திரமாக வலம்வருபவர் நம்ம தளபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சங்களையே பெற்றன.மற்றும் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும் தளபதி படமாச்சே வசூல் இல்லாம இருக்குமா? ஆம் திரைப்படத்தின் கதை எப்படியோ நம்ம தளபதியின் நடிப்பு வெறித்தனம்.

தொடர்ந்து நம்ம தளபதி வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கை பிரதிபாவின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. சங்கீதா தனது தங்கை பிரதீபாவுடன் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ நீங்களும் பாருங்கள் அந்த புகைப்படத்தை,

Advertisement

Advertisement