சின்னத்திரை சீரியலில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மகாலக்ஷ்மி. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை ஆரம்பித்தார். பின் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் என்றி கொடுத்தார்.
எனினும் இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துஇருக்கிறார்.நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேவதையை கண்டேன்” என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
மேலும் இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வந்தனர். இந்த தேவதையை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கும், ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகாரளித்து இருந்தார்.மேலும் இது சின்னத்திரை வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார்.
இதன் பின் அவர் கொடுத்த புகாரின் பெயரில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார். இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மி, தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். ரவீந்தர் தனது முகநூல் பக்கத்தில் மஹாலக்ஷ்மியுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ‘மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க. ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா. Coming soon live in FAT MAN FACTSKutty story with my pondatiiiii என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் இவரின் முதல் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படங்கள்..
000000000000000
Listen News!