• Sep 20 2024

இசையமைப்பாளர் அனிருத்தின் அக்காவைப் பார்த்திருக்கின்றீர்களா?- வெளியாகிய குடும்ப போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இப்போது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்கு கூட இசையமைக்க தொடங்கி இருக்கிறார். அண்மையில் அனிருத் இசை கச்சேரிகள் நடத்தியிருந்தார், அந்த ஷோ நல்ல ஹிட்டடித்து.


தற்போது இவர் ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன் 2, எனப் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இதில் இது தவிர யூடியூப் பிரபலமான டிடிவாசனுடைய படத்திற்கும் இசையமையக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.


இந்த நிலையில் அனிருத்தின் குடும்ப விஷயம் பற்றி வைரலாகி வருகின்றது. அதாவர் அனிருத்துக்கு வைஷ்னவி எனும் ஒரு அக்கா இருக்கிறார்.அவர் 2013 ஆம் ஆண்டு அபினவ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பல கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


தற்போது அனிருத் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியா தளத்தில் வைரலாகி வருகிறது.இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவர்தான் அனிருத்தின் அக்காவா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement