• Sep 21 2024

யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நக்ஷ்த்திராவின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் எனலாம். சீரியலைப் போலவே அதில் நடித்து வரும் பிரபலங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் நக்ஷத்திரா. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.


இதனைத் தொடர்ந்து தற்பொழுது கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். அத்தோடு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இவருடைய பிறந்தநாளை வீட்டில் கொண்டாடியிருந்தார். தற்பொழுது தனது பிறந்தநாளில் அம்மாவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement