தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகை சமந்தா மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவர்கள் இருவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் கொடி கட்டிப் பறந்து வருவது மட்டுமில்லாமல் நெருங்கிய தோழிகளாகவும் வலம் வருகின்றார்.இந்நிலையில் நேற்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது தந்தை மற்றும் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் கணவனுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இவர்களைப் போன்றே நடிகை சமந்தா மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமது தந்தையுடன் எடுத்த போட்டோக்கள் அவர்களின் ரசிகர்கள் பக்கத்தில் வெளியாகி இருக்கின்றன.
இதுவரை காலமும் சமந்தா மற்றும் நயன்தாரா தங்களது தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடாத நிலையில் , தற்போது அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்!
Listen News!