• Sep 20 2024

திருமண பந்தத்தில் இணையவுள்ள நயன்தாராவின் அபார்ட்மெண்ட் வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?-

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவரது நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து o2 என்னும் படத்தில் ஷோலே ஹரோயினாகவும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் இந்தத் திரைப்படம் வெளியாகவும் காத்திருக்கின்றது.

இப்போது நடிகை நயன்தாராவை பற்றிய பேச்சு என்றால் அது அவரது திருமணம் குறித்து தான். வரும் ஜுன் 9ம் தேதி இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்க இருக்கிறது.

முதலில் திருப்பதியில் நடப்பதாக இருந்தது, பின் 200 பேர் திருமணத்திற்கு வர இருப்பதால் இடம் மாற்றப்பட்டது.நயன்தாராவிற்கு சென்னையின் முக்கிய அபார்ட் மென்டில் ஒரு வீடு இல்லை இரண்டு வீடுகள் உள்ளதாம். சென்னையில் தாண்டி ஹைதராபாத் மற்றும் கேரளாவில் அவருக்கு பெரிய வீடுகள் இருக்கின்றன.

சென்னையில் அவர் வசிக்கும் பெரிய அபார்ன்மெண்டின் வெளிபுற புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement