• Nov 19 2024

நீலிமாவின் முழுக் குடும்பத்தையும் பார்த்திருக்கிறீர்களா..? அட இவரு தான் அவரோட கணவரா..? வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமது நடிப்புத் திறமையினால் புகழின் உச்சத்துக்கே போன நடிகைகள் பலர் உண்டு. இவ்வளவு எதுக்கு, 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் ரஜினியோடு சிறு வயதுப் பெண்ணாக சுற்றி வரும் மீனா, ஒருகட்டத்தில் ரஜினிக்கே ஜோடியானார் என்றால் பாருங்களன்.


அதேபோல் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா இசை. 1986 இல் சென்னையில் பிறந்த நீலிமா 1992 இல் சிவாஜி, கமல் நடிப்பில் சக்கைபோடு போட்ட தேவர் மகனில் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து இருப்பார். இவ்வாறு குழந்தை நட்சத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.


அதாவது 'நான் மகன் அல்ல, இதயத்திருடன், பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையரா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்மின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பான 'செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 


இவ்வாறாக நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக நடித்து வருகின்ற நடிகை நீலிமா இசை, இசை வாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில் நேற்றைய தினம் இவர்களது திருமண நாள் ஆகும். அதன் ஸ்பெஷலாக நீலிமா தங்களது திருமண நாள் வாழ்த்தை தனது கணவருக்கு கூறி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸடா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் இவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement