• Nov 14 2024

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபரின் கணவரை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படம்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இதில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது, கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம்.

இந்த சீரியலில் ராதிகா எனும் கதாப்பாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்தவர் தான் சீரியல் நடிகை ஜெனிபர்.இந்த சீரலியலில் நடித்ததால் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் .மேலும் இவர் நிஜத்தில் கர்ப்பம் ஆனதால் சீரியலில் இருந்து வெளியேறினார்.

மேலும் இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார். அதன்பிறகும் தனது மகனின் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.

இவர் சீரியல் நடிகை மட்டுமல்ல இவர் வெள்ளித்திரையிலும் நடிகையாக நடித்து ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இந்நிலையில் தற்போது இவரின் கணவர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement