• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவை கல்லூரி படித்த காலத்தில் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டா ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அதிலும் தற்பொழுது குடும்பத்திலிருந்து ஜீவா குடும்பமும் கண்ணன் குடும்பமும் பிரிந்து தனியாக வசித்து வருகின்றார்கள்.அதிலும் கண்ணன் கடன் வாங்கி பல பிரச்சினைகளில் சிக்கியதும் கதிர் அதனை சரி செய்ய போய் ஜெயிலுக்கு எல்லாம் போய்ட்டு வந்திருக்கின்றார். 

இதனால் கதிர் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கின்றார். மூர்த்தி கண்ணனை வீட்டை விட்டு போக சொல்லி இருக்கின்றார்.இதனால் எப்போது இவர்கள் குடும்பம் இணையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.


அடுத்து என்ன நடக்கப்போகிறது, குடும்பம் எப்போதும் ஒன்றாக இணையும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ஹேமா. இவர் இப்போது ஒரு புதிய வீடு ஒன்றையும் கட்டி வருகிறார், அவரது வீட்டிற்கும் ரசிகர்கள் நிறைய யோசனைகள் கூறி வருகிறார்கள்.

தற்போது ஹேமா கல்லூரி படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார், இந்த புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement