விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.இதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன்.
சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இன்று சீரியல்நடிகராக ரசிகர்கள் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். இவரது மனைவி அஜந்தா, ஃபோட்டோகிராபராக இருக்கிறார்.
வெங்கட் - அஜந்தா தம்பதிக்கு தேஜு என்ற மகள் இருக்கிறார். தாங்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் படங்களை தவறாமல் இன்ஸ்டகிராமில் பதிவிடுவார் அஜந்தா.
இந்நிலையில் தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Listen News!