• Sep 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காவியாவின் பெற்றோரைப் பார்த்திருக்கின்றீர்களா?- குவிந்து வரும் பாராட்டுக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த சீரியல்கள் பல ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் சகோதர ஒற்றுமையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.


இந்த சீரியலில் முல்லை என்னும் கதாப்பாத்திரத்தில் முதலில் சித்ரா என்பவர் நடித்து வந்தார். அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தற்பொழுது காவியா அறிவுமணி என்பவர் முல்லை காதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.இந்த நிலையில் இவர் தான் படித்து பட்டம் பெற்றதாகவும் தனது கனவு நிறைவேறி விட்டதாகவும் தனது பெற்றோருடன் நிற்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும். மேலும் காவியா இதற்கு முதல் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தங்கை கேரக்டரில் நடித்து வந்தனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement