• Sep 20 2024

சீமானின் புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் சீமான்.

மேலும் இவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகவும் சீமான் இருக்கின்றார்.

இவ்வாறு இருக்கும் இவர் பாடகராக, பாடலாசிரியலாக , நடிகராக என பல்வேறு திறமை கொண்டவர்.எல்லா துறையிலும் திறமை காட்டி வருகின்றார்.

அத்தோடு ஒரு செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்கள் முன்னாள் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் சீமான் பணியாற்றி இருக்கிறார்.

மேலும் சினிமாவில் இயக்குநர் சொல்வதை நடித்துவிட்டு சென்றாலும் அரசியல் அவர் களமாக இருந்தது. எப்போதும் தனது துடிப்பான பேச்சின் மூலம் மக்களை ஈர்ப்பவர். இவரது சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.

சினிமா, அரசியல் என கலக்கிவரும் சீமான் புதிய வீடு ஒன்றும் வாங்கியிருக்கிறார். நீளாங்கரையில் அந்த வீடு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது, வீட்டின் சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement