தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், கடந்த ஆண்டு பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.
இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி, பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமின்றி, இந்த ஜோடியை விமர்சனமும் செய்து வந்தனர். குறிப்பாக மகாலட்சுமி... ரவீந்தரின் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி வந்தனர்.
அதேபோல் திருமணமான கையோடு, ரவீந்தர் - மகாலட்சுமிக்கு 200 சவரனுக்கு மேல் நகை, பெரிய பங்களா, தங்கத்தாலான கட்டில், விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் போன்றவற்றை பரிசாக கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் தங்களுடைய திருமணம் குறித்து வெளியான விமர்சனங்களுக்கும் இருவரும் சேர்ந்து பல்வேறு பேட்டிகள் கொடுத்து பதிலடி கொடுத்து வந்தனர்.
அதைப்போல் அவ்வபோது தங்களுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக, ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ரொமான்டிக் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்து வருகின்றனர்.இந்த நிலையில் மகாலட்சுமி தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!