விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் ஒளிப்பரப்பாகி வருகின்றது.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து,ஷெரினா,அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த வாரம் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்றுள்ள ஷெரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஷெரினா ஒரு மாடல் என்பதை நாம் அறிவோம். அதுமட்டுமின்றி சமுத்திரக்கனி இயக்கி, நடித்து வெளிவந்த விநோயத சித்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை ஷெரினா தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
Listen News!