• Sep 20 2024

விரைவில் திருமணமாகப்போகும் நடிகை ஹன்சிகாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா…வெளியான வீடியோவால்…சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஹன்சிகா.வர் தமிழில் விஜய் ,சூர்யா, கார்த்தி, விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் பார்ப்பதற்கு இளம் வயது குஷ்பு போன்றே இருந்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பு என்றும் அழைத்தனர். பின்னர் உடல் எடை கூடியதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது.

எனினும் இதன் பின்னர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த ஹன்சிகாவிற்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள் தெலுங்கில் 3 படங்கள் என அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. சமீபத்தில் இவரின் 50-வது படமான மஹா வெளியானது.

எல்லா பிரபலங்களும் ஒரு யூடியூப் பக்கம் திறந்து தங்களது வீடு, செல்லும் இடங்களை வீடியோவாக பதிவிடுவது வழக்கம்.

அப்படி ஹன்சிகாவும் தனது வீட்டின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement