தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமான உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
மல்டி ஸ்டாரேர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சின்ன கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். நேற்றிலிருந்து அந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆனால் இது குறித்த எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான பழைய விக்ரம் படத்தை யாராலும் மறந்திட முடியாது. அப்படத்தின் முற்றிலும் மாறுபட்ட வெர்ஷனாக உருவாகியுள்ளது தான் இந்த விக்ரம் படம் .
மேலும் அந்த விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை லிசிஸி, தற்போது கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளதோடு விக்ரம் திரைப்படம் குறித்தும் புகழ்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!