தொகுப்பாளராக இருந்து சீரியலில் களமிறங்கியவர் தான் நடிகை பரீனா.கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரசிகர்கள் தற்போது வில்லியாக நடிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா .இதில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் பரீனா.
சின்ன சின்னதாக சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்திருந்தாலும் பாரதி கண்ணம்மா தொடர் தான் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
மேலும் இந்த தொடரில் வெண்பா வேடம் பரீனாவிற்கே மிகவும் பிடித்துபோக தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் இதில் நடித்து வந்தார்.
தற்போது குழந்தை பெற்றபின்னும் கேப் இல்லாமல் நடித்து வருகிறார் பரீனா.இவ்வாறுஇருக்கையில் எல்லா பிரபலங்களும் இப்போது ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி சீரியல் நடிகை பரீனாவும் தனது பக்கத்தில் வீட்டின் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதோ அவரின் வீட்டு புகைப்படங்கள்…
Listen News!