• Sep 20 2024

குக்வித் கோமாளி புகழின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- வெளியாகிய தொட்டிலாட்டு விழா வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பிடித்த பிரபலமாக மாறியவர் தான் புகழ்.அடித்தட்டு மட்டத்தில் இருந்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எவ்வளவோ சோதனைகளை கடந்த புகழ், தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

 சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது புகழும் இணைந்துள்ளார். புகழுடைய காமெடியை பார்த்து பலர் தங்களுடைய சோகங்களை மறந்து மகிழ்ச்சியை கொண்டு வருவதாக கூறி வருகிறார்கள்.


இவர் கடந்த ஆண்டு தன்னுடைய காதலியான பென்ஸி ரியா என்பரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்தது. தன்னுடைய மகளுக்கு ரித்தன்யா என்றும் பெயர் வைத்துள்ளார்.


இந்த நிலையில்மகளுடைய தொட்டிலாட்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement