விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தாமிரபரணி. இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பானு. இப்படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாகவும் வலம் வந்தார்.
இருப்பினும் இதனைத் தொடர்ந்து இவருக்கு நல்ல படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் மலையாள சினிமாவில் முக்தா ஜார்ஜ் என்ற பெயரில் நடித்து வருகிறார்.
திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டாலும் அவர் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது தவிர அவர் சொந்தமாக ஒரு சலூன் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது பானுவின் மகள் கண்மணி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அவர் பத்தாம் வளைவு என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். இவருடைய மகளின் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!