தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் மிர்ச்சி விஜய்.இவர் தற்பொழுது ஷு தமிழில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்ரி ஷோக்களைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
குறிப்பாக அண்மையில் முடிவடைந்திருந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியிருந்தார். இது தவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த டான் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் மிர்ச்சி விஜய் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் அவர் பல சமூக நலன் திட்டங்களையும் செய்து வருகின்றார்.குறிப்பாக கொரோனா காலத்தில் இலங்கைக்கு நேராக வந்தே உதவி செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!