தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.
இதனைத் தொடந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 169 வது படத்தை நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அத்தோடு இப்படத்தின் மூலம் மீண்டும் சூப்பர் ஸ்டார் Come Back கொடுப்பார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் சமீபகாலமாக ரஜினியின் அரிதான பழைய புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது பரவி வருவதை பார்த்துள்ளோம்.
அப்படி ரஜினி அவரின் தந்தையான ரானோஜி ராவுடன் இருக்கும் அரிதான புகைப்படம் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!