• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 7 இன் முதல் வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?-வெளியாகிய exclusive போட்டோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் கலக்கல் ஷோவானா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கவுள்ளது. வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் வீடு இரண்டுபடும். ஆனால் இந்த முறை இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடே இரண்டாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். அவருக்கு சம்பளமாக 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கடந்த சில வாரங்களாக ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வரும் நிலையில்,இதற்கான தொடர் பிரமோஷன்களில் சேனல் ஈடுபட்டு வருகிறது.ரவீனா, ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்தரஜா, விஷ்ணு, சத்யா, அனாயா, மூன்நிலா, பப்லு பிரித்விராஜ் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது. 


பின்னணி பேசுபவர், மாடல், சின்னத்திரை பிரபலங்கள், நடிகர்கள் என இந்த லிஸ்ட்டில் பலதரப்பினரும் இணைந்துள்ள நிலையில் போட்டியின் விதிமுறைகளும் பலமாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த முறை அதிகமான சுவாரஸ்யங்களுடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 இற்கான இரண்டு வீடுகளில் ஒரு வீட்டிற்கான ஒரு வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. து ரசிர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement