• Sep 20 2024

லிவிங் ரிலேஷன்சிப்பில் ஒரே வீட்டில் வசிக்கும் அமீர் மற்றும் பாவனியின் வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- வெளியாகிய போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாவனி. இவர் திருமணம் ஆன சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தவர். இதன் பின்னர் மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வந்த நிலையில், அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போது, வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அமீர் திடீர் என பாவனியிடம் காதலை கூறியது, செயற்கையாகவே பார்க்கப்பட்டது. மேலும் அமீர் பாவனியை விட வயதில் சிறியவர் என்பதால் அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார் பாவனி.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் விஜய் டிவி இவர்களை பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சி மூலம் ஒன்று சேர்த்து. இவர்கள் இருவருமே காதல் உணர்வோடு நடனம் ஆடியதால் இவர்கள் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு ஒக்கவுட் ஆனது. 

இந்நிலையில்,  பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 பைனல் போட்டி நடந்த போது , இதில் அமீர் - பாவனி ஜோடி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றதோடு பாவனி அமீருக்கு தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தினார். இதனை அடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.


இப்படியான நிலையில் அமீரும் பாவனியூம் லிவிங் ரிலேஷன்சிப்பில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். எனவே தங்களுடைய வீட்டை பிரபல சேனல் மூலம் சுற்றிக் காட்டியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.














Advertisement

Advertisement