• Sep 20 2024

டான் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளின் புகைப்படங்களைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நகைச்சுவைப் பாணியில் உருவாகம் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் டான்.

இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது டான் திரைப்படத்திற்கு தமிழ்நாடு திரையரங்க ஷேர் மட்டும் ரூ.40+ கோடி கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவ்வாறான சூப்பர் ஹிட் திரைப்படத்திலிருந்து சில முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சிவகார்த்திகேயன், பாலா, விஜய் உள்ளிட்டோர் viva session இல் கலந்து கொள்வது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

நீக்கப்பட்ட அந்தக் காட்சியின் bts புகைப்படங்களை நடிகர் பாலா தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement