‛மாநகரம், கைதி, விக்ரம்' என தொடர் வெற்றி படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'லியோ'. இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறவிருந்தது. இதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் திடீரென லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால், ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரியில் நடனத்தை போல் இசை வெளியிட்டு விழாவிற்கு வரும் ரசிகர்கள் மத்தியில் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிட கூடாது என்பதற்காக தான் இப்படியொரு விஷயத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், லியோ இசை வெளியிட்டு விழாவிற்காக தயார் செய்து வைத்திருந்த ப்ரோமோ வீடியோ இதுதான் என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இதனை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Audio launch Announcement Video 💔🥺 #Leo @actorvijay pic.twitter.com/q2aQrtww5y
Listen News!