• Sep 20 2024

நிவேதா தாமஸ் படித்த ஸ்கூலை பார்த்திருக்கிறீர்களா... இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகியாக உருவெடுத்தவர் தான் நிவேதா தாமஸ். இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.


மேலும் சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இருந்தாலும் தமிழை விட தெலுங்கு படங்களில்தான் நிவேதா தாமஸ் அதிகமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தெலுங்கில் அவரது நடிப்பில் வெளியான 'சாகினி தாகினி' என்ற படம் சிறந்த பாராட்டைப் பெற்றிருக்கின்றது. 


அதுமட்டுமல்லாது ரசிகர்களால் 'கியூட்'டான நடிகையாக கொண்டாடப்படும் நிவேதா தாமஸ், தற்போது ஆளே மாறி போயிருக்கிறார். அதாவது முன்பு இருந்ததை விட 2 மடங்கு உடல் எடை கூடிஇருப்பதாக பலரும் கூறி இருந்தனர். எனினும் இவர் தற்போது தனது உடல் எடையை சற்றுக் குறைந்து வருகின்றார்.


இந்நிலையில் நிவேதா தாமஸ் சமீபத்தில் தான் முன்பு படித்த பாடசாலைக்கு திடீர் விசிட் அடித்திருக்கின்றார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பகிர்ந்திருக்கின்றார். அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

இதோ அந்தப் புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement