சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் மாரிமுத்து.
நடிகர் மாரிமுத்து ஆரம்ப காலத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். மேலும், இவர் கண்ணும் கண்ணும், புலி வால் போன்ற படங்களை இயக்கி இருக்கின்றார். அதே போல உதயா, கடைக்குட்டி சிங்கம், யுத்தம் செய், சண்டக்கோழி, பரியேறும் பெருமாள் போன்ற பல்வேறு படங்களில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளது. நடிகர் மாரிமுத்து அஜித் நடித்த ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ தொடரில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகின்றார். இவர் இந்த சீரியலில் நடித்து அதிகம் பெயர் பெற்றாலும் இவர் பல படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்து மிரட்டி உள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் இவரின் குடும்பம் பற்றி சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து இருந்த மாரிமுத்து ஆரம்பம் முதல் இப்ப வரைக்கும் மனைவி மீது இருக்கும் தன்னுடைய அன்பை வெளிப்படையாக வெளிக்காட்டி வருவாராம்.
இவருடைய மனைவி பெயர் பாக்கியலட்சுமி.இவரை மலர் என்று தான் கூப்பிடுவாராம்.இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.அதாவது இவருக்கு அகிலன் என்ற மகன் உள்ளார்.அவர் அமேசானில் வேலை செய்கிறார்.
அடுத்து இவருக்கு ஒரு பொண்ணு உள்ளார்.அவரின் பெயர் ஜஸ்வர்யா.அவங்க தற்போது படித்துக்கொண்டு இருக்கிறார்.இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Listen News!