சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் பல பிரபல முன்னணி இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் தங்களது துறையை தாண்டி படங்களில் கதாநாயகனாக தங்களை உருமாற்றி வருகிறார்கள். அந்த வகையில் பல முன்னணி இசையமைப்பாளர்களும் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல வெற்றிப்படங்களில் நடித்து வருவதோடு தங்களை திரையுலகில் ஹீரோவாக கலக்கி வருகிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் இசையமைப்பாளர் என்பதை தாண்டி பின்னணி பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்வசம் கொண்டுள்ளார்.
திரையுலகில் பிரபல இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் உதவியின் மூலம் இசையமைப்பாளராக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். மேலும் இதன் காரணமாக தனது பெயருக்கு பின்னால் விஜய் அவர்களின் பெயரை இணைத்து விஜய் ஆண்டனி என தன் பெயரை மாற்றி கொண்டார். அதைத் தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பாளராக பல படங்களில் பல வெற்றி பாடல்களை பாடியும் இசையமைத்தும் உள்ளார்.
இந்நிலையில் இசையை தாண்டி படங்களில் ஹீரோவாக நடிக்க எண்ணி நான் எனும் திரைப்படம் மூலம் முதன்முதலாக தன்னை கதாநாயகனாக தன்னை உருமாற்றி கொண்டார். இவ்வாறு தற்போது பல படங்களில் ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் கலக்கி வருகிறார் .
இவ்வாறுஇருக்கையில் திடீரென இவரின் மனைவியின் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
Listen News!