விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி நாராயணன். இந்த நிகழ்ச்சியில் தனது குரலை விட தனது குறும்புத்தனத்தினாலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கு பற்றியதன் மூலமே ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் 2 வது சீசனில் நடிகர் அஷ்வினுடன் சேர்ந்து இவர் செய்த சேட்டைகளும் ஏராளம் எனலாம்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல்யமானதை அடுத்து தற்பொழுது பல ஆல்பம் பாடல்களில் பாடி வருவதோடு பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த டான் படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆர்வம் மிக்க இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது புடைவை கட்டி வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் நம்ம ஷிவாங்கியா இது எனக் கேட்டு வருவதையும் காணலாம்.
பிற செய்திகள்
- ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா; கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி – இன்றைய எபிசோடு அப்டேட்
- சனம் ஷெட்டியின் முன்னாள் காதலருக்கு பிறந்த குழந்தையை கொஞ்சி விளையாடிய பிக்பாஸ் பிரபலம்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
- பிரபல நடிகைக்கு வீடு தேடி வந்த கொலை மிரட்டல்…பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!