விஜய்டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் சுனிதா. இதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்டதன் மூலமே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார்.
அதற்கு காரணம் அவரின் உழைப்பும், விடா முயற்சியும், தொழில் பக்திதான் என்கிறார்கள் சுனிதாவுக்கு நெருக்கமானவர்கள். தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் பிஸியாக வீடியோக்களை வெளியிட்டு வரும் வாடிக்கையையும் வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது தனது தாய் தந்தை வசிக்கும் அசாம் ஹோம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்அவர் அதில் பதிவிட்டுள்ள அசாம் ஹோம் tour 1.3 மில்லியன் வியூஸ் பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது
அந்த வீடியோவில் அழகிய இயற்கை எழில் சூழ்ந்த அவர் வீடு இருக்கிறது. வீட்டில் நிறைய செல்ல பிராணிகளுடன் அவர் குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவர்கள் குடும்பத்திற்காகவே ஒரு குட்டி கோவில் மற்றும் பூஜா அறை. சுனிதாவின் தங்கை தாய் தந்தை மற்றும் மாமா அந்த வீட்டில் பூஜா விடுமுறை செலவிடுகிறார்கள்.
சுனிதா அசாம் நாட்டின் பாரம்பரிய புடவையான mekhela chador அணிந்து கொண்டு இருக்கிறார்.அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி கொண்ட சுனிதா, மொழி தெரியாமல் கஷ்டப்பட கூடாது என்ற காரணத்திற்காக முறைப்படி தமிழையும் கற்றுக் கொண்டார். முடிந்த வரை எல்லா இடங்களிலும் சரளமாக தமிழில் பேச முயற்சி செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!