• Sep 20 2024

வெள்ளைக்காரனுக்கு அடிமையாகி விட்டாயே- மகளின் திருமணத்தால் சர்ச்சையில் சிக்கிய கருணாஸ்- வறுத்தெடுக்கும் பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த  2001 ஆம் ஆண்டு வெளியான 'நந்தா' படத்தில், லொடுக்கு பாண்டி என்கிற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தவர் கருணாஸ்.

இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு மட்டும் 10 படங்கள் வெளியானது. இதில் பாபா, காதல் அழிவதில்லை, வில்லன், ஏப்ரல் மாதத்தில், பாலா போன்ற படங்களில் கருணாஸின் காமெடி நல்ல வரவேற்பை பெற்றது.


காமெடியை தாண்டி காமெடியை அடிப்படியாக கொண்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் கருணாஸ். அந்த வகையில் இவர் நடித்த, அம்பா சமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி, போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடைசியாக கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் நடித்திருந்தார்.நடிப்பை பாடகர், , இசையமைப்பாளர், தயாரிப்பாளர், மற்றும் அரசியல்வாதி என பன்முக திறமையோடு விளங்கும் கருணாஸ், பாடகியான கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு, டயானா என்கிற மகளும் கென் என்கிற மகனும் உள்ளனர். கருணாஸின் மகள் டயானா பல் மருத்துவராக உள்ள நிலையில், கென் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.இந்நிலையில், கருணாஸின் மகள் டயானாவிற்கும் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ருத்விக் என்பவருக்கும், பெங்களூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த திருமணத்தில் வெள்ளை நிற கவுனில்... கருணாஸின் மகள் தேவதை போல் தாய் தந்தையுடன் நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கருணாஸ் வெள்ளைக் காரன் முறைப்படி தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது பழனி தேவர் என்னும் அரசியல் பிரமுகர் கருணாஸை விமர்சித்துள்ளார்.


அதில் வார்த்தைக்கு வார்த்தை முக்குலத்தோர் இனம் என்று பேசுவார்.ஆனால் அவர்களை கொன்ற வெள்ளைக்காரன் முறைப்படி திருமணம் செய்து வைத்திருக்கிறாயே. உன்னுடைய யோக்கிதம் தெரிந்து விட்டது. வெள்ளைக்காரன்  மதத்திற்கு அடிமையாகி விட்டாயே எனத் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யும் நடிக்க வரும் போது விஜய் என்று சொன்னார். இப்போது பெயர் வந்ததும் தன்னை யோசப் விஜய் என்று அடையாளப்படுத்துவது நியமானதா என சமூக வலைத்தளவாசிகள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement