• Nov 14 2024

TTF வாசனின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி... அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் யூடியூப் பிரபலம் TTF வாசன். இவரைப் போல பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.


இவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். அதாவது நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு புகார்கள் எழுந்து, அபராதம் விதித்ததை தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.


அப்படித்தான் சமீபத்தில் பைக்கில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அதாவது 230கிலோ மீற்றர் வேகத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இவர் வீலிங் செய்தமையினால் தான் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.


இந்நிலையில் ஏற்கெனவே வாசனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த காஞ்சிபுரம் உயர் நீதிமன்றம் தற்போது வாசனுடைய ஜாமீன் மனுவை 2-ஆவது முறையாகவும் தள்ளுபடி செய்துள்ளது. அத்தோடு வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

Advertisement

Advertisement