• Nov 10 2024

எப்போதுமே சிரித்த முகத்துடனே இருப்பார்- மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று இரவு முழுவதும் சிவராத்திரி விழாவில் பாட்டு பாடி இறை வழிபாடு நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில், வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.


சென்னை, வடபழனியில் உள்ள மயில்சாமியின் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே போல நடிகரும்  அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மயில்சாமியின் திரு உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.மயில்சாமி எனக்கு ஒரு அண்ணன் மாதிரியே இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடனே பேசுவார். அவரது மறைவு செய்தி அறிந்ததுமே ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக பேரிழப்பு தான் என்று உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.


அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் போலீஸ் அதிகாரியாக மயில்சாமி நடித்திருப்பார். மொத்தம் 50 நாட்கள் அந்த படம் எடுக்கப்பட்டது. அதில், 40 நாட்கள் என்னுடனே அவர் டிராவல் செய்தார். அவருடைய நல்ல மனசை பலரும் பாராட்டி உள்ளனர் என நெஞ்சுக்கு நீதி படத்தில் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement