தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக விளங்கும் வடிவேலு நீண்டதொரு பிரச்சினைக்கு பிறகு தற்பொழுது ரிஏன்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். இந்த வகையில் உதயநிதியின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது நான் ஒரு படத்தில் இரண்டு வடிவேலாக நடித்தேன். அந்த இயக்குநருக்கு ஒண்ணுமே தெரியாது. நான் கேட்டேன் எப்பிடி நடிக்கிறது என்று சொல்லிக் கொடுங்க என்று கேட்டேன். அவரு பேசாமலே நின்னாரு.
இதுவே பெரிய இயக்குநராக இருந்திருந்தால் சொல்லிக் கொடுத்திருப்பாங்க. அவனுக்கு ஒன்றுமே தெரியாது. அப்பிறமா நானாத் தான் நடிச்சுக் கொடுத்தேன்.இப்போ என்ன என்றால் இதை எல்லாம் மறந்திட்டு நாங்க சொல்லிறதை மட்டும் செய்யுங்க என்று திமிர் காட்டுறான்.
இயக்குநர்கள் இல்லாமல் நடிகர்கள் இல்லை என்று சொல்லி இருக்கிறேன். அதையே புடிச்சு வச்சு நான் இல்லாம நீங்க இல்ல கிளம்பு என்றுறாங்க. எனக்கு திரையுலகம் தான் வாழ்க்கை கொடுத்தது. இருப்பினும் இப்படியான சம்பவத்தால யாரை குறை சொல்வது என்று தெரில. என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய மீம்ஸ் எல்லாம் பார்க்கும் போது சில டைம்ல சிரிப்பாக இருக்கும் சில டைம்ல பயமாக இருக்கும். அரசியிலில் எல்லாம் நம்மளை கோர்த்து விடுறாங்க என்று தெரிவித்தார். மேலும் வடிவேலுவை இப்படி செய்த இயக்குநர் யார் என்ற விபரம் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!