பிக் பாஸ் ரியாலிட்ரிஷோ தான் தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியார்களுக்கு ராசி பலன் சொல்லும் கூல் சுரேஷ் ஒவ்வொரு போட்டியாளர்களையும் பார்த்து பார்த்து ராசிபலன் கூறுகிறார். அந்தவகையில் விசித்ராவிற்கு என்ன கூறினார் என்று பார்ப்போம்.
எல்லோருக்கும் வணக்கம் என்று சொல்லிவிட்டு ஆரம்பத்திலே மாயாவை கலாய்த்து விடுகிறார்.மீனா ராசி நேயர்களே நீங்க இந்த வீட்டுல கால் எடுத்து வச்ச நேரம் ரொம்ப ஜெக ஜோதியாகத்தான் இருந்தது. ஒரு இரண்டு நாளைக்கு பிறகு ஒரே கண்ணீரும் ,கம்பளமுமாக இருந்தது. அது ஏன் என்று பிக் பாஸ் பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு தெரியும். உங்களுக்கு கண்டம் இருக்கிறதனால் சில சாமிகளை சுற்றி வராமல் இருப்பது நல்லது. முக்கியமாக அந்த பிரதீப் சாமிய சுற்றி சுற்றி வராதீங்க. அவன் உங்களை போட்டு தள்ளத்தான் இங்க வந்து இருக்கிறார் என்று நாசூக்காக கூறுகிறார்.
அதுமட்டும் இல்லாமல் விசித்ரா மற்றும் ஜோவிகாவின்னுடைய நம்பர்களை கேட்டு கூட்டி பார்த்து விட்டு 10 என் வரவும் கொஞ்சம் நாளைக்கு வாயை மூடி கொண்டு இருந்தால் பிக் பாஸ் டைட்டில் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்.
அப்போது அனைவரும் கைதட்டி வாழ்த்த அதுவும் கொஞ்சம் டவுட்டுதான் பார்ப்போம் இதனை நான் சொல்ல வில்லை கூல் குடிக்கும் சாமி சொல்லுகிறார் என்று கூறுகிறார். இதனை கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் சிரித்து விடுகின்றனர். உண்மையை சொன்னாலும் அதை காமெடியாக ராசி பலன் வடிவில் சொல்லி இருக்கிறார் கூல் சுரேஷ்.
Listen News!