• Nov 19 2024

அவருக்கு ராமாயணம் பற்றிய எந்த அறிவும் இல்லை... ஆதிபுருஷ் படத்தை எதிர்க்கும் மகாபாரத நடிகர்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் தான் 'ஆதிபுருஷ்'. ஓம் ராவத் இயக்கிய இப்படமானது இராமாயணத்தை மையமாக கொண்டமைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக திரைக்கு வந்த இந்த திரைப்படத்திற்கு வெளியான நாள் முதல் இன்றுவரை விமர்சன ரீதியான கருத்துக்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.


அந்தவகையில் மகாபாரதத்தில் நடித்த ஒரு சில நடிகர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்து உள்ளனர். இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் நடித்த கஜேந்திர சவுகான் என்பவர் கூறுகையில் "இந்தப் படத்தைப் பார்க்க நான் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால், நான் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்பதை என் மனசாட்சி ஏற்க மறுத்து விட்டது. 

குறிப்பாக சொல்லப்போனால், ட்ரெய்லர்கள் மற்றும் காட்சிகள் அனைத்தையும் பார்த்த பிறகு இந்த படம் மதிப்புக்குரியது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது நம்பிக்கைகளை நான் சமரசம் செய்ய விரும்பவில்லை. நான் ராமரை ஸ்ரீ ராமராக பார்க்க விரும்புகிறேன். ஆதிபுருஷ் பின்னணியில் ஆழமான சதி இருப்பதாக நான் நம்புகிறேன். இதன்மூலம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்க விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.


அதேபோல் மகாபாரதத்தில் பீஷ்மராக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா கூறுகையில் தயாரிப்பாளர்கள்   ராமாயணத்தை இப்படத்தின் மூலமாக அவமதிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் "ராமாயணத்திற்கு ஆதிபுருஷை விட பெரிய அவமரியாதை எதுவும் இல்லை. ஓம் ரவுத்துக்கு ராமாயணம் பற்றி எந்த அறிவும் இல்லை என்று இதன் மூலமாக தெரிகிறது. 

நமது ராமாயணத்தை கலியுகமாக மாற்றிய சிறந்த அறிவுஜீவி எழுத்தாளர் மனோஜ் முன்டாஷிர் சுக்லாவும் இருக்கிறார். அவரது முட்டாள்தனமான வசனங்களும், தூக்கத்தை வரவழைக்கும் திரைக்கதையும் தூக்க மாத்திரைகளைக்கூட முகம் சுளிக்க வைக்கும் படத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்துக்கும் இதுவரை எழுதப்பட்ட ராமாயணத்துக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement