மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ் தரமான சம்பவத்தை நிகழ்ந்துவிட்டார் என்று படத்திற்கு சமூக வலைத்தள பக்கத்தில் நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் மாமன்னன் படம் பார்த்துவிட்டு திரையரங்கில் செய்தியாளர்களிடம் படம் குறித்து பேசிய இளைஞர் ஒருவர், மாமன்னன் படத்தில் தேவையில்லாத அரசியலை மாரிசெல்வராஜ் சொல்லி இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்ததை இப்போதும் நடக்கிறது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னைக்கு நீங்களும் நானும் நல்லத்தானே இருக்கோம் அடிச்சிக்கிட்டு இருக்கோமா?
மாமன்னன் முழுக்க முழுக்க சாதிப்படம் , கேவலமான சாதிப்படம் இந்த படத்தின் மூலம் அவர் சாதி வெறியை தூண்டிவிடுகிறார். படம் எடுப்பதே நீங்களும் நானும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நீங்களும் நானும் அடிச்சுக்குறதுக்கா படம் எடுக்கணுமா? மாரி செல்வராஜ் நல்ல திரைப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்.
ஆனால், இப்போ ரொம்ப மோசமா போய் கொண்டிருக்கிறார். வடிவேல் ரொம்ப நல்ல நடிச்சி இருக்கிறார். மாமன்னன் படத்தில் ஹீரோவே ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக்கும் வடிவேலும் தான், மற்றபடிகீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். உதயநிதி வழக்கமான நடிப்பை கொடுத்து இருக்கிறார் என்று மாமன்னன் படத்தை படுமோசமாக விமர்சித்துள்ளார்.
Listen News!