பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ப்ரியாமணி. அதன் பிறகு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடிக்கத்தொடங்கி சினிமாத்துறையில் புகழ்பெற்றார்.
பல வருடங்களுக்கு பிறகு நடிகை ப்ரியாமணி ஜவான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி நடித்த ஜவான் திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ப்ரியாமணி.
சமீபத்தில், அவர் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில், இந்திய சினிமா நடிகர்களை பற்றி ஒரே வார்த்தையில் அவர் கூறியிருக்கிறார். மேலும், படத்தில் இவர் இணைந்து நடித்த சில ஹீரோக்களை பற்றியும் ஒரே வார்த்தையில் அவர் கூறியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
முதலாவதாக, தெலுங்கில், 2010ல் வெளியான ரகடா படத்தில் நடிகர் நாக ஆர்ஜூனாவுடன் ப்ரியாமணி நடித்திருப்பார். நாக அர்ஜூனாவை பற்றி அவர் கூறுகையில், "அவரு அழகு" எனவும்,
,தமிழில் அவரின் முதல் படத்திற்காக ஜோடி சேர்ந்த கார்த்தியை பற்றி கேட்க, அவருதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்" எனவும், அவருடன் படத்தில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரை பற்றி கேட்காமல் இருக்க முடியுமா என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி கேட்டபோது, "அவருதான் தலைவர், கடவுள் எல்லாமே " என கூறியிருக்கிறார் ப்ரியாமணி.
இயக்குனர் அமித் சர்மா இயக்கத்தில் மைதான் படத்தில் நடிக்கிறார். மேலும், கடந்த வருடம் படப்பிடிக்கப்பட்ட மலையாள படமும் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதும் குறிப்பிடதக்கது.
Listen News!