குஷ்புவின் சகோதரர் நலம் பெற ரசிகர்கள் தங்களது பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர் .
பாஜகவில் இணைந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் குஷ்பு திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர் என இருவேறு பரிணாமங்களில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தைத் தயாரித்த அவர், தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.அத்தோடு மின்சார கண்ணா படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார்
மேலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவரும் குஷ்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அவரது படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இவ்வாறுஇருக்கையில் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய சகோதரர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டரில் கடந்த 4 நாட்களாக இருக்கிறார். அத்தோடு இன்று அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. மேலும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்த ட்வீட்டினை அடுத்து, பாஜக மூத்த தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம் உட்பட பலரும் பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் சகோதர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்... காங்கிரஸ் பிரமுகர் லட்சுமி ராமச்சந்திரனும், சகோதரருக்காக வேண்டிக்கொள்வதாக ட்வீட் பதிவிடுள்ளார்.. மேலும், ஏராளமான தொண்டர்களும், ஆதரவாளர்களும், குஷ்புவுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்து வருகிறார்கள்.. சகோதரர் நலம் பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!