இயக்குநர் கௌதம் மேனன் மிகப்பெரிய கமல் சார் ரசிகர். அதனால் கூட படத்தில் நாயகன் படத்தின் ரெபரன்ஸ் வைத்திருக்கலாம்" என லோகேஷ் கனகராஜ்பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு'. இப்படத்தில் நடிகர் சிம்பு முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.கௌதம் மேனன் இப்படத்தை இயக்கி இருந்தார்.
தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து என்னும் வீரனின் வாழ்க்கைச் சம்பவங்களையே இப்படம் எடுத்துக் காட்டுகின்றது.
இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இப் படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். "வெந்து தணிந்தது காடு படத்தினை இன்னும் பார்க்கவில்லை. படம் பற்றி நல்ல விமர்சனங்கள் வருகின்றன. இயக்குநர் கௌதம் மேனன் மிகப்பெரிய கமல் சார் ரசிகர். அதனால் கூட படத்தில் நாயகன் படத்தின் ரெபரன்ஸ் வைத்திருக்கலாம்" என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.
Listen News!