'லியோ' திரைப்படம் நாளை உலகெங்கிலும் வெளியாக உள்ள நிலையில், தளபதியின் ரசிகர்கள் திரையரங்குகளில் ஈசல் போல குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், லியோ படத்திற்கான டிக்கெட் விலை தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் லோகேஷ் கனகராஜுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
லியோ படத்திற்கு தமிழ்நாட்டில் 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லவே இல்லை என நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள போதும், லியோ படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படவிருக்கிறது.
லியோ டிக்கெட் புக்கிங் ஓபன் செய்ததில் இருந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டை புக் செய்துவருகின்றனர். எனினும், டிக்கெட் ரேட் தமிழ்நாட்டிலும், பெங்களூரிலிரும் 2000 ரூபாய்க்கு மேல் இருப்பதாக ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், இன்று மாலை லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து டிக்கெட் ரேட் குறித்து பேசிய போது, 'எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம். பொறுத்திருந்து அடுத்தடுத்த காட்சிகளில் பார்க்கலாம்' என தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் லோகேஷின் டிக்கெட் குறித்த கருத்தை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பலமடங்கு விலையில் விற்கப்படும் தின்பண்டங்கள், காம்போ எனும் பெயரில் டிக்கட்டுடன் ஸ்னாக்ஸை தலையில் கட்டுதல், அநியாய பார்க்கிங் கட்டணம், ப்ளாக் டிக்கட் விற்பனை. இதப்பத்தி இவர் பேசுறதே இல்லை. இப்படியான தியேட்டர்களை கண்டிக்கறதும் இல்லை. நமக்கு மட்டும் அறிவுரையாம்' என குறிப்பிட்டிருக்கிறார்.
Listen News!