• Sep 20 2024

அஜித் வளர்ச்சிக்கு இவர்தான் காரணம் - மேடையில் கதறி அழுத பிரபல இயக்குநர் V.Z.துரை..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தயாரத்த 'முகவரி', 'காதல் சடுகுடு' படங்களை இயக்கிய V.Z.துரை இப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் அஜித் மற்றும் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி குறித்து பேட்டி அளித்துள்ளார் .அதில் அவர் கதறி அழுது சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது - "ரொம்ப நல்ல மனிதர். அப்பெல்லாம் யார்கிட்டேயாவது உதவி இயக்குநரா இருந்திருந்தால்தான் தயாரிப்பாளர்கள் அவருக்கு முதல் படம் கொடுப்பாங்க. நான் அப்ப முதுகலை படிப்புதான் படிச்சிட்டு இருந்தேன். உதவி இயக்குநராகவும் இல்லை. ஆனாலும் சக்ரவர்த்தி சார் என் மீது நம்பிக்கை வச்சு, 'முகவரி'யை இயக்கற வாய்ப்பைக் கொடுத்தார். எனக்கு அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல, குருவாகவும் இருந்தார். முதல் நாள் படப்பிடிப்புக்கு முன்னாலிருந்து, எடிட்டிங் வரை சகலத்திலும் எனக்கு உறுதுணையா இருந்தார்.

நான் 23 வருடங்களாக இந்த சினிமா இன்ஸ்டில இருக்கன் .என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர்  சக்கரவர்த்தி சார் தான்.அவர் இப்போ இந்த உலகத்தில் இல்லை என கூறி அழ ஆரம்பித்து விட்டார்.அந்த மேடையில் ஒரு நிமிஷ அஞ்சலியும் செலுத்தி இருந்தார்.

மேலும் தல அஜித் இவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் சக்கரவர்த்தி எடுத்த நிறைய திரைப்படங்களின் பங்களிப்பு தான் என்று சொல்வேன்.என கூறி இருந்தார்.

இவர் இவ்வாறு கூறிய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி பார்க்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Advertisement

Advertisement