தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் காயத்ரி சங்கர். இவர் தமிழில் '18 வயசு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர். இப்படத்தினை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
எனினும் தொடர்ந்து சிறு சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர் 'ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்த காயத்ரி 'விக்ரம்' படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தார்.
காயத்ரி ஒரு பேட்டியில் கூறுகையில் "நான் நடித்த படங்கள் எல்லாமே கணவருக்கும் எனக்கும் செட்டாகாத கதையம்சத்தை கொண்டனவாகவே அமைகிறது" என்று அவரையே கிண்டல் செய்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'மாமனிதன்' படத்தில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்திற்குப் பின்னர் மிகப் பெரியளவில் பேசப்பட்ட நடிகை காயத்ரி தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு க்ளாமர் போட்டோஷூட்டிற்கு இறங்கி சமூக வலைத்தளத்தை கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாமனிதன்' படத்தின் உடைய விமர்சனத்தை கூறிய கூல் சுரேஷ் "காயத்ரி எனக்கு பொண்ணாட்டி மாதிரி, உங்களுக்கு பொண்ணாட்டி மாதிரி, பக்கத்துவீட்டு பொண்ணாட்டி மாதிரி என்று பல வழிகளில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்" எனக் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை தொடர்ந்து "இயக்குநர் சங்கர் மகள் அதிதி, என் காதலி" என்றும் கூறியிருக்கின்றார். இவ்வாறாக நாயகிகள் பற்றி இவர் கூறி வரும் விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
Listen News!