விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்து இந்த மாதம் முடிவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் ஷிவின் அசீம் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இதில் அசீம் டைட்டில் வின்னர் ஆகி 50 லட்சம் பணத்தையும் சொகுசு கார் ஒன்றையும் பரிசாகப் பெற்றார்.
இவர் டைட்டில் வின்னர் ஆகியதில் இருந்து பல விமர்சனங்களும் குவிந்து வருகின்றது.இந்த நிலையில் முதல் முறையாக டைட்டில் வின்னரான அசீம் முதல் முறையாக நேர்காணலில் ஈடுபட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது நான் டைட்டில் வின்னர் ஆவேன் என்று நினைக்கவே இல்லை. இது மக்களால் தான் முடிந்தது இதற்கு நன்றிகள் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள்ளே எனக்கு பிடித்தது மணிகண்டன் தான். அவரை முதலில் தெரியாது ஆனால் வீட்டுக்குள்ளே போனதுக்கு பிறகு தான் அவரைப் பற்றியே நல்லாத் தெரிஞ்சது. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் பாம்பு என்றால் அது மகேஷ்வரி என்று தான் சொல்வேன் ஏனென்றால் அவருக்கு நல்லது கெட்டது தெரியாது எப்பவும் பாம்பு மாதிரி சீறிட்டே இருப்பார் என்றும் கூறினார்.
அதே போல முதலை மைனா நந்தினி தான். ஏனென்றால் அவர் சொல்ல வந்ததை ஒழுங்காக சொல்லாமல் முழுங்கிடுவாள் மற்றும் படி அவள் நல்ல பொண்ணு என்று கூறினார். அதே போல கழுகுப் பார்வை என்றால் அது ஷிவின்தான் அவங்க எல்லாவற்றிலும் ரொம்ப கவனமாக இருப்பார். அதே போல பிக்பாஸ் வீட்டுக்குள்ள எனக்கும் விக்ரமனுக்கும் கூட டாஸ்க்கில் தான் சண்டை வந்ததே தவிர தனிப்பட்ட ரீதியிலோ கொள்கையிலோ எனக்கும் அவருக்கும் சண்டை இல்லை எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும் என்றும் சொன்னார்.
அத்தோடு பிக்பாஸ் வீட்டுக்குள்ள சிங்கம் என்றால் அது நான் என்று தான் கூறுவேன். இது அகங்காரத்தினால் சொன்னது கிடையாது தன்னம்பிக்கையில் சொன்னது தான் என்றும் கூறியதோடு மக்களுக்கு மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!