இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிரூத் இசையில் சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர்.இப்படம் வெளியாகி மூன்று நாட்களில் ஒட்டுமொத்தமாக 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஜெயிலர் படம் கொடுத்த வெற்றியால் நெல்சன் பல்வேறு சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார்.அந்த வகையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில் ஜெயிலர் கதையை சொல்ல ரஜினி வீட்டிற்குத் தாமதமாகப் போனதாக தெரிவித்துள்ளார்.
அதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, நெல்சன் என்னை சந்தித்து கதை சொல்ல தாமதமாக வந்ததாகவும், லேட்டாக வந்துவிட்டு நல்லதா ஒரு காபி சொல்லுங்க என கேட்டதாகவும் நகைச்சுவையாக பேசினார் ரஜினி. இந்த விஷயம் சமூகத்தளங்களில் செம வைரலானது.
இந்நிலையில் இதற்கான காரணத்தை தான் நெல்சன் கூறியுள்ளார்.அதாவது அதாவது ரஜினியை சந்தித்து நான் கதை சொல்ல லேட்டாக போனதற்கு அனிரூத் தான் காரணம். ஏனென்றால் அனிரூத் எப்போதும் இரவில் தான் வேலை செய்வார். பீஸ்ட் படத்தின் வேலைகளுக்காக அப்போது அனிரூத்தின் ஸ்டுடியோவில் தான் நான் இருந்தேன்.
இரவு வேலையை துவங்கி அதிகாலை நான்கு மணி வரை பீஸ்ட் படத்தின் வேலைகள் அனிரூத்தின் ஸ்டுடியோவில் போய்க்கொண்டிருந்தது.அதன் பிறகு நான் வீட்டிற்கு வந்து தலைவரை சந்தித்து கதை சொல்ல கிளம்ப தாமதமாகிவிட்டது என கூறியுள்ளார். மேலும் ஜெயிலர் படம் வெற்றி பெற்றதால் நடிகர் விஜய் வாழ்த்துத் தெரிவித்திருந்தார் என்றும் நெல்சன் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!