சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை பாவனா.சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இவர் பிளஸ் 2 படித்துக்கொண்டு இருந்த நேரத்தில், ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போது மலையாள இயக்குநர் ஒருவர் கண்ணில்பட்டு நடிகையாக மாறினார்.
பாவனா மலையாளத்தில் அறிமுகமான முதல் படமான 'நம்மல்' மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த படவாய்ப்புகள் அவரைத் தேடி சென்றன. அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்தார். ஜெயம் ரவியுடன் பாவனா இணைந்து நடித்த தீபாவளி திரைப்படம் பாவனாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்த நேரத்தில் தான் அவர் ஒரு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் எதிரொலித்து மலையாள பிரபலங்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த துயரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வரமுடியாத பாவனா பலவிதமான மன வலியை அனுபவித்து வந்தார்.
பட வாய்ப்புகள் தேடி வந்த போதும் படத்தில் நடிக்கும் மனவலிமை அவரிடம் இல்லாததால், படவாய்ப்பை மறுத்து வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருந்தது கன்னட சினிமாதான். குறிப்பாக ஷிவராஜ் குமார், பாவனாவை அழைத்து பேசி தைரியம் கொடுத்து கன்னட சினிமாவில் நடிக்கவைத்தார். கன்னடத்தில் இவர் நடித்த அனைத்துப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தற்போது அசல் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடம் கழித்து தமிழில் 'தி டேர்' என்ற த்ரில்லிங் கதையில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாவனாவின் சொந்த அண்ணன் ஜெயதேவ் இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்று வருகிறது. பல வலிகளை மறந்து பாவனா இந்த படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்று பாவனா குறித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!