இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும் அவரது நடிப்பில் உருவாகி கடந்த நவம்பர் 4ம் திகதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் தான் லவ் டுடே'. இப்படத்தில் கதாநாயகியாக இவானா என்பவர் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.இதனால் இப்படம் குறித்த அறிக்கை ஒன்றை பிரதீப் வெளியிட்டுள்ளார். அதில் "லவ் டுடே இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் மூன்றாவது வாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், லவ் டுடே திரைப்படத்திற்கும் எனக்கும் அளித்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தனது டுவிடட்டர் பக்கத்தில் கூறியதாவது, “'LoveToday' டைட்டிலை பயன்படுத்தியதை பொறுத்தவரை, நான் அதை முதலில் உருவாக்கியவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். அது 1997-ல் வெளியான LoveToday பட புகழ் இயக்குநர் பாலசேகரன். நீங்கள் காலத்தை தாண்டிய டைட்டிலை உருவாக்கியுள்ளீர்கள். அந்த டைட்டிலுக்கும், தங்களின் பெருந்தன்மைக்கும் நன்றி சார்.!” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரத்யேகமான பேட்டியில் நடிகர் இயக்குநர் பிரதீப் கலந்து கொண்டபோது,“'லவ் டுடே' பட டைட்டில் R.B சௌத்ரி சார்ட்ட ரைட்ஸ் இருந்தது. இருப்பினும் விஜய் சாரிடமும் கேட்கப்பட்டது. ஏ ஜி எஸ் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிகில் படம் தயாரித்து இருந்ததால், விஜய் சாரை அணுகுவது எளிதாக இருந்தது. விஜய் சாருக்கு லவ் டுடே படத்துக்கான மூல குறும்படத்தை அனுப்பி, அந்த கதையை தான் லவ் டுடே என எடுக்கப்போவதாக கூறி அனுமதி வாங்கினோம்” என பிரதீப் தெரிவித்திருந்தார்.
Listen News!