ரம்யா என்.எஸ்.கே., தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார்.இவர் சிறுவயது முதலே கர்னாடிக்கை முறைப்படி கற்றுக்கொண்டார்.
16 ஆண்டுகள் சங்கீதம் கற்றுக்கொண்டு வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி அசத்தி உள்ளார்.
மேலும் இவர் 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி இருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் நாயகனாக நடித்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரம்யா. இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது, திரையுலகினர் பலரும் வாழ்த்து கூறி இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது சத்யா தனது மகனின் லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட ரம்யா-சத்யாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!